தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக செய்யப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அண்மைய இலங்கை யுத்தத்தின் போது யுத்த குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
யுத்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் நோக்கிலேயே சிலர் அரசாங்கத்திற்கு எதிராக யுத்த குற்றச்சாட்டை சுமத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களின் காரணமாக ஆயிரம் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
யுத்தத்தின் போது ஏற்பட்ட பொதுமக்கள் இழப்புக்கள் குறித்து ஒருவரை மாறி ஒருவர் குற்றம் சுமத்திக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment