தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட கிராமங்களில் மக்களை மீள் குடியேற்றும் போது, முன்னர் இருந்தது போலவே அனைத்து மக்களையும் அங்கு குடியேற்றுவதன் மூலம், யாவரும் சமாதானத்துடன் வாழ முடியும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட கிராமங்களில் மக்களை மீள் குடியேற்றும் போது இராணுவ முகாம்களும் அமைக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வடபகுதியில் கலப்புக் கிராமங்களை உருவாக்கி, இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற வேண்டும் எனவும் மீள்குடியேற்றத்திற்கு சர்வதேச சமூகத்தின் ஆலோசனைகள் தேவையற்றவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் சிங்களவர்கள் முன்னர் வசித்து வந்தனர். பயங்கரவாதிகள் அவர்களை விரட்டி விட்டனர். இதனால் முன்னர் இருந்தது போலவே அனைத்து மக்களையும் அங்கு குடியேற்றுவதன் மூலம், யாவரும் சமாதானத்துடன் வாழ முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீளக்குடியேற்ற நடவடிக்கைகளின் போது சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடிபணியக் கூடாது எனவும், சர்வதேச சக்திகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்படுவதில்லை எனவும் எல்லாவல மேதானந்த தேரர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment