Saturday, May 23, 2009

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்படுவதற்கு பொதுமன்னிப்புச் சபை வரவேற்பு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் 26ம் திகதி இலங்கை விவகாரம் குறித்து ஆராயத் தீர்மானிக்கப்பட்டுள்ளமையை சர்வதேச பொது மன்னிப்புச் சபை வரவேற்றுள்ளது.
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பாதுகாப்பற்ற முறையில் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் இலங்கை அரசாங்கம் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை விரைவாக வழங்குவதற்கு மனித உரிமைகள் சபை அழுத்தம் கொடுக்க வேண்டும் என பொது மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் சாரிபி தெரிவித்துள்ளார். 

அத்துடன் இடம்பெயர்ந்தவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் மற்றும் ஏனைய தொண்டு பணியாளர்களை அனுமதிக்க அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். 

இந்த கூட்டம் இலங்கையில் நீண்ட நாட்களாக அரசாங்கத்கத்தாலும் சிறு ஆயுதக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களையும் அடக்குமுறைகளையும் சர்வதேசத்தின் முன்னால் அரகேற்றுவதற்கான சிறந்த வாய்ப்பு என அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் ஏற்கனவே மூடிமறைக்கப்பட்ட நிகழ்கால அனர்த்தங்கள் தொடர்பிலான மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்தும் இதன் போது ஆராயப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் சிறுபான்மை மக்கள் தமது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பின்பற்றுவதில் இருந்து தடுக்கப்பட்டு அதிகரித்த மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை யுத்தத்தை வெற்றி கொண்டதாக அறிவித்துள்ள நிலையில் அது தொடர்பிலான போர்க் குற்றங்கள் குறித்து இதன் போது ஆராயப்பட்டு அதில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை மேற்கொள்ள வேண்டும் என பொது மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.