பல்லாயிரக் கணக்காண மக்களைக் கொன்று குவித்துவிட்டு, மேலும் பல்லாயிரக்கணக்காண மக்களை அங்கவீனவர்கள் மற்றும் மோசமான காயங்களுக்கம் உள்ளாக்கிவிட்டு, இலட்சக்கணக்காண மக்களை சொந்த இடங்களில் இருந்து விரட்டியடித்துவிட்டும் சிங்களதேசம் கொண்டாடும் வெற்றிவிழாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று.....
நூற்றுக்கணக்காண தமிழ் மக்கள் கறுப்பு ஆடைகளுடன் நோர்வே பேர்கன் நகரில் ஒன்றுதிரண்டனர்.
நகரின் முக்கிய பகுதிகளுக்கூடாக கறுப்புக் கொடிகளுடன் ஊர்வலமாகச் சென்று பொதுமக்களின் கவனத்தை ஈர்ந்ததுடன் சிங்களத்தின் உண்மை முகத்தையும் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டினார்கள்.
அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாங்களை ஜநா பெறுப்பெடுக்க வேண்டும் என்பதை வலியுறுக்தி, ஜநா சபைத்கு அனுப்பி வைப்பதற்காக கையெழுத்துக்களும் பெறப்பட்டது.