ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்காவின் ‘இறுதிப்போரை’ நிறுத்த கோரிக்கை
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் சிறீலங்கா அரசாங்கத்தினை இறுதி தாக்குதலை நிறுத்தும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்அறிக்கையில் பெருமளவில் பொதுமக்கள் கொல்லப்படுவது ஆழ்ந்த கவலை அளிப்பதாகவும் மேலதிக உயிரிழப்பை தவிர்க்கும் பொருட்டும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற அனுசரணை செய்து வெளியேற காலதாமதம் செய்யாமல் உடனடியாக தாக்குதலை நிறுத்தக்கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் மனித உரிமைகளையும் சட்டங்களையும் மதித்தே நடைபெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறீலங்கா அரசாங்கம் வெள்ளிக்கிழமை தாம் 48 மணிநேர அவகாசத்திற்குள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளையும் பிடித்துவிடுவோம் என சூளுரைத்திருந்தமை தெரிந்ததே.
ஆனாலும் ஐரோப்பிய ஒன்றிய அறிக்கையில் உடனடியாக சண்டைகளை நிறுத்தும்படி கோரிக்கைவிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது
No comments:
Post a Comment