Saturday, May 16, 2009

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கடலோரத்தில் இருந்த கடைசிப் பகுதியையும் கைப்பற்றிவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.

இலங்கையின் வடகிழக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கடலோரத்தில் இருந்த கடைசிப் பகுதியையும் கைப்பற்றிவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.
இதன் மூலம், கடந்த 26 ஆண்டுகளில் முதல் முறையாக, விடுதலைப் புலிகள் கடல் வழியாகச் செல்லும் வாய்ப்பை ராணுவம் அடைத்துவிட்டது. 

புலிகள் வசம் உள்ள மீதிப் பகுதிகளும் விரைவில் தங்கள் வசம் வந்துவிடும் என்று இலங்கை ராணுவத்துக்காகப் பேசவல்ல பிரிகேடியர் உதயநானயகாரா பிபிசியிடம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, விடுதலைப் புலிகளிடமிருந்து இதுவரை எந்தக் கருத்தும் கிடைக்கப் பெறவில்லை. 

போர்ப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை வெளியேறிவிட்டார்கள். மீதமுள்ளவர்கள் தொடர்ந்து அந்தப் பகுதியிலேயே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை, விடுதலைப் புலிகள் அந்தப் பகுதியில் பெருமளவு நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். தற்போது அது முழுமையாக மாறிவிட்டது என்று இலங்கையில் உள்ள பிபிசி
செய்தியாளர் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.