Saturday, May 16, 2009

யுத்த நிறுத்தம் குறித்து மீண்டும் அமெரிக்கா அரசாங்கத்திற்கு வலியுத்தல்

இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு வலயம் மீதான தமது எறிகனை வீச்சுக்களை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அதன் பேச்சாளர் இந்த வலியுறுத்திலை விடுத்துள்ளார். 

அரசாங்கத்தின் கண்மூடித்தனமான எறிகனை வீச்சுக்களால் நூற்றுக் கணக்கான அப்பாவி உயிர்கள் பலியாவதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டினார். 

இவ்வாறு அப்பாவி உயிர்கள் பலியாகும் படி தமது முன்னெடுப்புகளை மேற்கொள்ளாது அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை அறிவித்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என கோரியுள்ளார். 

இதற்கிடையில் இலங்கையின் தற்போதய மனிதாபிமான நிலவரங்கள் குறித்து ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் அமெரிக்கா கலந்துரையாடியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கைப் பிரச்சினை தொடர்பில் மத்தியஸ்த்தம் வகிக்கும் சர்வதேச சமூககங்களில் ஐக்கிய நாடுகள் சபை முக்கிய பங்குவகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் இருத்தரப்பினரும் தமது ஆயுத ரீதியான போராட்டத்தை கைவிட்டு பாதிக்கப்படுகின்ற அப்பாவி மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் கோரியுள்ளார். 

இதேவேளை இலங்கையின் தற்போதய மனிதாபிமான நிலவரங்கள் மற்றும் யுத்த நிறுத்தம் குறித்து இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் நேற்று தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர். 

இந்த கலந்துரையாடலில் அமெரிக்கா சார்பாக அதன் தெற்கு மற்றும் மத்திய ஆசியவின் துணை செயலாளர் ரிச்சட் பவுச்சர் பங்குபற்றியுள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.