இலங்கை வந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் மற்றும் வெளியுறவுச்செயலர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து, கலந்துரையாடினர்.
இலங்கை வந்துள்ள இந்தியத் தூதர்களான எம்.கே.நாராயணன், சிவ் சங்கர்மேனன் ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலை விருந்தளித்து உபசரித்தார்.
ஜனாதிபதி இல்லத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்தியத் தூதர்களுடன், தமிழர்களின் மறு வாழ்வு குறித்து ஜனாதிபதி கலந்துரையாடியதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையின் பின்னணியில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும், வெளியுறவுத்துறை செயலாளர் மேனனும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
இடம்பெயர்ந்துள்ள தமிழர்களின் புனர்வாழ்வு, அதிகாரப்பகிர்வு, சுயாட்சி உள்ளிட்டவை குறித்து மேனனும், நாராயணனும், ராஜபக்ஷவுடன் ஆலோசனை நடத்தினர். அகதிகளாக இருக்கும் தமிழர்களுக்கு என்னென்ன உதவிகளை வழங்க வேண்டும், பாதுகாப்பு நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை அவர்கள் நடத்தினார்கள்.
இந்தியா ரூ. 500 கோடி நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கவுள்ளது. அவற்றை தமிழர்களுக்கு விநியோகிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது இந்திய அரசு, ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக பிரபாகரன் இறப்பு குறித்த மரணச் சான்றிதழ் தேவைப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளதாக இந்தியச்செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை இந்திய அதிகாரிகளை இன்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி மற்றும் புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்
இதன் போது இலங்கையின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்கு இந்தியா உடனடியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாக புளொட் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தியாவைப் பொறுத்தவரையில், வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைக்கே முன்னுரிமை வழங்கவுள்ளதாக சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்திய அதிகாரிகளை சந்தித்தது.
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் 13 வது திருத்தச்சட்ட அமுலாக்கமும் பிளஸ_ம் என இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு செயலாளரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இன்று இலங்கை ஜனாதிபதியை சந்தித்தபோதே இந்த கருத்தை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பின்னரான 'பிளஸ்" என்ற சொல்லுக்கான அர்த்தம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை
இதேவேளை வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தோரை 180 நாள் அதாவது 6 மாத காலப்பகுதிக்குள் மீளக்குடியமர்த்தப் போவதாக இலங்கை அரசாங்கம், இந்திய அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் இன்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசரையும் வெளியுறவு செயலாளரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.


No comments:
Post a Comment