Thursday, May 21, 2009

பிரிட்டிஷ் குடிவரவு நடைமுறைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன- தூதரகம் அறிவிப்பு

இலங்கையர்கள் விஜயம் செய்வதற்கும் கல்வி கற்பதற்கும் தொழில் பார்ப்பதற்கும் பிரிட்டன் மிகவும் பிரபல்யம் வாய்ந்த நாடாக விளங்கி வருகிறது. இலங்கையர்கள் அங்கு குடியேறி சுக வாழ்வு வாழ்வதற்கும் ஊக்குவிக்கப்படுகின்றது.
இலங்கையைப் போன்றே பிரிட்டனிலும் எல்லைகளை வலுவாகவும் பாதுகாப்பாகவும் பேணுவதில் அந்நாட்டு அரசாங்கம் மிகுந்த அக்கறை காண்பித்து வருகின்றது. விசா சேவைகளை மேலும் விருத்தி செய்வதிலும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் பிரிட்டிஷ் எல்லைப் பாதுகாப்பு நிறுவனம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறது.

இதற்காக, தற்போதைய நடைமுறைகளும் நடவடிக்கைகளும் அடிக்கடி மறுமதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களில் பிரிட்டனுக்கான விசா விண்ணப்பதாரர்கள் இச்சேவையின் மேம்பாடு பற்றி உணர்ந்திருப்பார்கள். மேலும், இலங்கையர்களின் விண்ணப்பங்கள் தற்போது சென்னையிலுள்ள பிரிட்டிஷ் பிரதி உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் பரிசீலனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

2007ஆம் ஆண்டு முடிவில் பிரிட்டிஷ் எல்லை நிறுவனம் தரவு சேகரிப்பு சேவைகளில், உலகளாவிய ரீதியில் biometric எனப்படும் நவீனமுறையில் தரவு சேகரிக்கும் முறைமையை ஆரம்பித்தது.

தற்போது நாங்கள் 137 நாடுகளில் biometric முறையில் தரவுகளை சேகரித்து 3 மில்லியன் விசா விண்ணப்பதாரர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறோம். இச் சேவையை நாங்கள் மட்டும் செய்யவில்லை. ஆளடையாள முகாமைத்துவத்திற்கு கைத்தொழில் தரமாக biometric விருத்தியடைந்து வருவதுடன், சகல கடவுச்சீட்டுக்களும் அநேகமாக தனித்துவமான biometric முறையில் அடையாளம் காணும் முறைமையை கொண்டிருக்கும். பிரிட்டிஷ் விசா விண்ணப்பதாரர்கள் சில தனிப்பட்ட தகவல்களைத் தருவதுடன் ஆவணங்கள் சிலவற்றையம் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இது தேவைக்கதிகமானது எனக் கருதப்படலாம்.

ஆனால், விண்ணப்பம் யதார்த்தமானது என மதிப்பிடுவதற்கு இது எமக்கு உதவுகிறது. biometric முறை, பிரிட்டிஷ் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத் துவது மட்டுமன்றி விசாவை பெறுவோர் மோசடியான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதையும் ஆளடையாள மோசடி புரிவதையும் தடுக்க உதவுகிறது. அடையாள மோசடி உலகளாவிய ரீதியில் முக்கியமானதும் அதிகரித்து வருவதுமான பிரச்சினையாகும். இது பயங்கரவாதத்திற்கும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கும் துணை புரிவதுடன் தேசிய பொருளாதாரத்தையும் சீரழிக்கிறது.

உங்களை அடையாளம் காண்பதற்குப் பயன்படுத்தப்படும் தனித்துவமான குணாம்சங்களைக் கொண்டதே biometric முறையாகும். குறிப்பாக, விசா விண்ணப்பங்களைப் பொறுத்த அளவில் உங்கள் பொதுவான முகச்சாயலையும் 10 விரலடையாளங்களையும் நீங்கள் கொடுக்க வேண்டும். உங்கள் பெருவிரல்களையும் ஏனைய விரல்களையும் ஒரு நுண்ணாய்வுக் கருவியின் மீது வைத்து இதற்கான பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். இப்பரிசோதனை முடிவடைந்து விரலடையாளங்களும் பதிவுசெய்யப்பட்ட பின்னர் உங்கள் முகம் புகைப்படம் எடுக்கப்படும்.

இந்த நடைமுறைகள் விரைவானதும் உங்கள் விருப்பத்தின் பேரிலானதும் இலகுவானதும் அத்துமீறல் அற்றதாகவும் இருக்கும். பிரிட்டிஷ் எல்லை நிறுவனத்தினால் 2007ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முறைமை, உலகெங்கிலுமுள்ள பிரிட்டிஷ் தூதராலயங்களில் இயங்கி வரும் 52 விசா பிரிவுகளிலிருந்து 22 அதிசிறந்த உலக நிலையங்கள் வரையில் ஏற்கெனவே தீர்மானம் எடுக்கும் பணிகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை விசா பிரிவை மையமாகக் கொண்டு, இலங்கை கொழும்பு விசா பிரிவு இயங்க ஆரம்பித்தது. டிரிட்டிஷ் எல்லை நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர்களின் விசா விண்ணப்பங்களை ஆராய்ந்து வரும் சென்னைப் பிரிவு, இலங்கையிலிருந்து விசாவுக்கு விண்ணப்பிப்போர் குறித்து முடிவு எடுப்பதில் தீர்க்கமுடன் செயற்பட்டு வருகிறது. அவர்களது விண்ணப்பங்கள் தொடர்பான முடிவையும் இப்பிரிவு அவர்களுக்கு அறிவித்து வருகிறது.

* கடவுச்சீட்டுக்களை தன்னகத்தே வைத்திருக்கும் பிரிட்டனின் கொழும்பு உயர் ஸ்தானிகராலயம் விசா விண்ணப்ப நிலையத்தினால் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் அவற்றை விண்ணப்பதாரர்களிடம் திருப்பிக்கொடுத்து விடுகிறது. கடவுச்சீட்டுக்கள் சென்னைக்கு அனுப்பப்படுவதில்லை. *விசாவுக்கு விண்ணப்பிக்க அதிக செலவு ஏற்படுவதில்லை. விசா கட்டணங்கள் உலகளாவிய ரீதியில் நிர்ணயிக்கப்படுகின்றன. உலகின் எப்பகுதியிலிருந்து விண்ணப்பித்தாலும் விசா கட்டணங்கள் ஒரே அளவிலானதாகவே இருக்கும்..

*பிரிட்டிஷ் விசா விண்ணப்பங்களை பரிசீலனை செய்வோர் எங்கிருந்து பணியாற்றினாலும் கடுமையான ஒழுக்க கோவைக்கு உட்பட்டே செயலாற்ற வேண்டும். இதனால் இவர்கள் ஒருமைப்பாட்டுடனும் தனிப்பட்ட மற்றும் உணர்வுபூர்வமான விடயங்களை மிகக் கவனமாகவும் பிரிட்டிஷ் தரவு பாதுகாப்பு சட்டத்திற்கமையவும் விண்ணப்பங்களை கையாள வேண்டும்.

பிரிட்டனிலும் வெளிநாடுகளிலும் வாடிக்கையாளர்கள் செய்யவேண்டிய சகல விடயங்களையும் எடுத்துக் காட்டும் வாடிக்கையாளர் ஒப்பந்தம் ஒன்றை பிரிட்டிஷ் எல்லை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. விசா விண்ணப்ப முடிவுகளுக்கான விநியோக இலக்குகளை இச்சாசனம் தருகிறது. முடிவு எடுக்கும் பணியை சென்னைக்கு மாற்றிய பின் சில தகவல் தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக சில விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்வதில் ஓரளவு தாமதம் ஏற்பட்டது.

இக்குறைபாடுகளுக்கு இப்பொழுது தீர்வு காணப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்கள் உத்தேச பிரயாணத் திகதிக்கு நியாயமான அளவு நாட்கள் முன்னதாகவே விண்ணப்பங்களைக் கையளித்துவிட வேண்டுமென ஆலோசனை கூறப்படுகிறது. விசா விண்ணப்பங்களில் ஏற்படும் தாமதங்கள் குறித்து விசா விநியோக அலுவலகத்தில் VFS விசாரிக்கலாம்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.