தமிழக முதல்வர் கருணாநிதி, மகிந்த அரசுக்கு மறைமுகமாக துணை நிற்பதாக, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ் ராம்தாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாரிய தமிழ் இன அழிப்பினை மேற்கொண்ட, மகிந்த அரசாங்கத்துக்கு உதவியும், தமிழ் மக்களை ஏமாற்றும் வகையில் அறிக்கைகளை விடுத்தும், தமிழக முதல்வர் போலித்தனமாக நடந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் இவ்வாறு தமிழர்களின் விவகாரம் தொடர்பில், இரண்டு வேடங்கள் தரித்து செயற்படுவதை, ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எந்த வகையிலும், மகிந்த அரசாங்கத்திற்கு இந்தியா ஆதரவாக செயற்பட கூடாது என அவர் கோரியுள்ளார்.
மகிந்த அரசாங்கத்திற்கு உதவுவது, தமிழர்களுக்கு எதிரான செயலாகவே கருத வேண்டும் எனவும், எஸ் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment