இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க பாகிஸ்தானிய அரசாங்கமே அதிக உதவிகளை வழங்கியதாக ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீனா, ரஸ்யா போன்ற நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை முன்னெடுத்த யுத்தத்திற்கு ஆதரவளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பாகிஸ்தானிய அரசாங்கம் வழங்கிய ஆயுதங்கள் யுத்தத்தின் போது பெரும் உதவியாக அமைந்ததென அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment