Wednesday, May 27, 2009

புலனாய்வுத்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனகரட்னம் எம்.பியை கட்சி உறுப்பினர்கள் சந்திக்க அனுமதி

குற்றப் புலனாய்வுத்துறையினரால் 4 ம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னத்தை அவரது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பிரகாரம் கடந்த திங்கட்கிழமை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா பார்வையிட்டு அவருடன் உரையாடியுள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிஷோர் சிவநாதனும் சென்று பார்வையிட்டதாக அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்தார்.

இதே வேளை நீண்ட காலமாக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை நாடு திரும்புமாறு கோர வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே தற்போது கருத்து வலுப்பெற்று வருவதாக கூறபப்டுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஜெயானந்தமூர்த்தி ( லண்டன்), பத்மினி சிதம்பரநாதன் ( லண்டன்), செல்வராஜா கஜேந்திரன் ( ஐரோப்பிய நாடுகள்), செல்வம் அடைக்கலநாதன் ( இந்தியா) , எம்.கே. சிவாஜிலிங்கம் ( இந்தியா) ஆகியோர் 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்காமல் தொடர்ந்தும் விடுமுறை நீடிக்கப்பட்ட நிலையில் இந் நாடுகளிலேயே தங்கியிருக்கின்றார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் கட்சியின் அரசியல் ரீதியான செயற்பாடுகளை மேலும் வலுப்பெறச் செய்ய வேண்டிய தேவை இருப்பதால் இவர்களை நாடு திரும்புமாறு கட்சி கோர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.