கொழும்பு மாவட்டம், வத்தளை கல்வெட்டி வீதியில் அமைந்திருந்த தமிழ் வர்த்தகருக்கு சொந்தமான கடையொன்றை இனந்தெரியாத சிலர் தீ மூட்டியுள்ளனர்.
திங்கட்கிழமை அதிகாலை மோட்டார் வாகனத்தில் வந்த இனந்தெரியாத இருவர் இந்த செயலை செய்துள்ளதாக குறித்த வர்த்தகரினால் வத்தளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் அந்த கடை முழுமையாக தீக்கிரையானதாக, முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஏற்கனவே தமது வாகனத்தை இவ்வாறான சில அடையாளம் தெரியாதவர்கள் சேதப்படுத்தியதாகவும், அந்த கடையின் உரிமையாளர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment