வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்கள் பாரியளவு உணவத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருவதாக பிரபல சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
உணவுத் தட்டுப்பாடு காரணமாக சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக மூன்று அகதி முகாம்களில் உணவு மற்றும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத அரச சார்பற்ற நிறுவன ஊழியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அருணாச்சலம் ராமநாதன் மற்றும் செட்டிக்குளம் ஆகிய இடைத்தங்கல் முகாம்களில் இவ்வாறு உணவுத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மலசல கூடவசதிகளின்றி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment