வன்னியில் விடுதலைப்புலிகளிடம் எஞ்சியிருக்கும் பகுதியைக் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினருக்கு எதிராக அதிகளவான தற்கொலைத் தாக்குதல்கள் இடம் பெறுகின்றன என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் பகுதிகளை நோக்கி முன்னேறிச் செல்லும் படையினர் தற்கொலைத் தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர் எனத் தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார, இதனால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்த விபரங்களை வெளியிட மறுத்துள்ளார்.
இதேவேளை தொடரும் மோதல்களில் படையினர் பாதுகாப்பு வலயத்திலுள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் மண்ணரணை கைப்பற்றியுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment