முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்திருந்ததாகக் கருதப்படும் விடுதலைப்புலிகளின் கடைசிச் சுரங்க காவலரணும் கைப்பற்றப்பட்டது என இராணுவத்தரப்பு அறிவித்துள்ளது.
வெள்ளைமுள்ளிவாய்க்காலுக்கு தெற்கே விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்டிருந்த கடைசிச் சுரங்கக் காவலரண் படையினரால் கடும் சண்டையின் பின் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் நடந்த கடும் சண்டையில் பல படையினர் காயமடைந்துள்ளனர் என்றும் இராணுவத் தரப்பு கூறியுள்ளது.
58ஆவது படையணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேற்று முழு நாளும் இடைவிடாது நடைபெற்ற கடும் சண்டையை தொடர்ந்து இந்தக் காவலரண் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்னமும் 800 மீற்றர் தூரத்தைப் படையினர் கைப்பற்றினால் விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொது மக்களை மீட்க முடியும் என்றும் படைத்தரப்பு தெரிவித்தது.
முள்ளிவாயாக்கால் சுரங்கக் காவலரண் கைப்பற்றப்பட்ட பின்னர் தேடுதல் நடத்திய படையினர் ஆயுத தளபாடங்களை மீட்டுள்ளனர் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment