
சர்வதேச நாடுகளினால் இலங்கை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை சமாளிக்கும் வகையில் ராஜ்தந்திர ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதுவராலயங்கள் அந்நாடுகளினது உயர் இராஜதந்திரிகளுடன் இலங்கையின் நன்மதிப்பை கூட்டக் கூடிய வகையில் பிரச்சாரங்களை முன்னெப்பார்கள் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித்த கொஹனே தெரிவித்துள்ளார்.
வேறும் நாடுகளது தூதுவராலயங்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி இலங்கை நிலவரங்களை விளக்கும் விசேட திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உலகின் முக்கிய நாடுகளது வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசி உரையாடல்களை ஏற்படுத்தி இலங்கை நிலவரத்தை தெளிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக பிரயோகிக்கப்படும் கடும் அழுத்தங்களை சமாளிக்கக் கூடிய விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக கொஹனே குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment