Saturday, May 2, 2009

பாதுகாப்பு வலயம் மீதான குண்டு வீச்சுப் படங்கள் அம்பலமானது குறித்து ஐ.நாவிடம் அரசு ஆட்சேபம்விசாரணை நடத்துமாறு பிரதிநிதி புஹுனேயை அழைத்து அமைச்சர் சமரசி



முல்லைத்தீவு பாதுகாப்பு வலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஐக்கிய நாடுகள் சபையினால் பிடிக்கப்பட்ட அந்தரங்கச் செய்மதிப்படங்கள் ஊடகங்களுக்கு கசிந்தது குறித்து இலங்கை அரசாங்கம் கொழும்பிலுள்ள ஐ.நாவின் இலங்கைக்கான இணைப்பாளர் (பிரதி நிதி) நீல்புஹுனே யிடம் விளக்கம் கோரியுள்ளது.
மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க, கொழும்பிலுள்ள ஐ.நா. பிரதிநிதி நீல் புஹுனேயை நேற்று அவசரமாக அழைத்து, ஐக்கிய நாடுகளினால் மிகவும் அந்தரங்கமாகப் பேணப்பட வேண்டிய உணர்ச்சி பூர்வமான படங்களை ஊடகங்க ளுக்கு கசிய விட் டது எப்படியென்று உடனடியாக விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கேட்டார். அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹன்னாவும் கூட இருந்தார். இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அரசு அறிவித்த ஆட்சேபத்தை அறிவிப்பதாக நீல் புஹுனே அமைச்சரிடம் தெரிவித்தார்.

உணர்ச்சிகரமான தகவல்கள் ஐ.நாவினால் அம்பலப்படுத்தப்படுவது இது முதல் தடவை அல்ல முன்னர் வன்னிப் பிரதேசத்தில் மோதல்களின் போது இறந்தவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடும் அறிக்கையும் ஊடகங்களுக்கு அறியவிடப்பட்டது; தகவல் அம்பலமாக்கப்பட்டது.

செய்மதிப் படங்கள் அம்பலமானது குறித்து ஐ.நா விரைந்து விவாதங்களை நடத்தி நிலைமையை தெளிவுபடுத்த வேண்டும்; விரைந்தும் தரவேண்டும் ஐக்கிய நாடுகள் சபை தன் மீது தானே ஒளி பாய்சி உண்மையைக் கூறும் கட்டம் வந்திருக்கிறது என்று அமைச்சர் சமரசிங்கா கூறினார்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்துக்குள் தஞ்சம் அடைந்த பின்னர் விமானப் படையினர் ஜெட் விமானங்களால் குண்டு வீச்சு நடத்திய போது ஐக்கிய நாடுகள் சபையினால் அந்தரங்கமான முறையில் பிடிக்கப்பட்ட செய்மதிப்படங்கள் ஊடகங்களுக்கு அம்பலமாக்கப்பட்டதை தொடர்ந்தே அமைச்சர் சமரசிங்கா ஐ.நா பிரதிநிதி புஹுனேயை அழைத்து விளக்கம் கேட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணப் பிரிவான "யுஎன்ஓசற்"" (unosat) ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி எடுக்கப்பட்ட செய்மதிப்படங்கள் இப்போது பத்துக் கிலோ மீற்றர் தூரத்துக்கும் குறுகியுள்ள சிறு நீளத்துண்டு கடற்கரையையும் தென்னந்தோட்டங்களும் கொண்டபகுதியை காட்டுக்கின்றது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.