
வன்னியில் இடம்பெற்று வரும் யுத்த நிலவரம் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமிருந்து தாம் அதிகம் தெரிந்துகொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களுடனான சந்திப்பின் போது தமக்கு தெரியாத பல விடயங்களை அவர்கள் கூறியதாக ரணில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதான கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் தலைவன் என்ற ரீதியில் இலங்கை நிலவரத்தை வெளிநாட்டு இராஸதந்திரிகளின் ஊடாக தெரிந்து கொள்ள நேர்ந்துள்ளமை மிகவும் கேவலமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கப் படையினரிடம் சரணடைந்த பெரும் எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர் யுவதிகள் காணாமல் போயிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சரணடைந்த 3000த்திற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் குறித்த தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படாமை மிகவும் மோசமான நிலைமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment