Sunday, May 24, 2009

வன்னயில் பாரிய படைத்தளங்களை அமைக்க சிறிலங்கா அரசு திட்டம்

வன்னிப் பகுதியில் இரண்டு இராணுவ தலைமையகங்களும் இரண்டு வான்படைத் தளங்களும் நிறுவப்பட உள்ளதாக சிறிலங்காப் படை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:

வன்னிப் பகுதியில் படையினரின் இரண்டு தலைமையகங்களும் இரண்டு வான்படை தளங்களும் பல காவல் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

பொதுமக்கள் அங்கு மீளக்குடியமர்த்தப்படுவதற்கு முன்னர் அவை அமைக்கப்படும்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இரண்டு இராணுவத் தலைமையகங்களும் இரணைமடு பகுதியில் வான்படை தளமும் அமைக்கப்படவுள்ளது.

வவுனியா படை தலைமையகத்துடன் இணைந்து இந்த இரண்டு தலைமையகங்களும் செயற்படும்.

இரணைமடுப் பகுதியில் அமைக்கப்படவுள்ள வான்படை தளத்தில் பல ஓடு பாதைகள் அமைக்கப்படவுள்ளதுடன் அங்கு ஜெற் ரக குண்டுவீச்சு வானூர்திகளும் நிறுத்திவைக்கப்படவுள்ளன.

இரண்டாவது வான்படை தளம் முல்லைத்தீவில் ஏற்படுத்தப்படும்.

கடற்படையினரும் வடக்கு - கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் பல கண்காணிப்பு நிலைகளை அமைக்கவுள்ளனர்.

மேலும் வன்னியில் 50 காவல்துறை நிலையங்களும் திறக்கப்படவுள்ளதுடன் காவல்துறை தலைமையகம் ஒன்றும் கிளிநொச்சியில் நிறுவப்படவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.