Sunday, May 24, 2009


இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் எதுவும் தலையிடக்கூடாது என ஐ.நா.வைக் கோருவதற்காக கொழும்பு தயாரித்துள்ள நகல் யோசனைக்கு மலேசிய அரசாங்கம் ஆதரவளிக்கக்கூடாது என அந்த நாட்டில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான டாத்தோ சிறி எஸ்.சாமிவேலு வலியுறுத்தியிருக்கின்றார்.

இது தொடர்பாக மலேசியப் பிரதமர் நஜீப் ராசாக்குக்கு அனுப்பிவைத்துள்ள அவசர வேண்டுகோள் ஒன்றிலேயே இதனைத் தான் வலியுறுத்தியிருப்பதாகவும் சாமிவேலு தெரிவித்திருக்கின்றார்.

"மலேசியாவில் 18 லட்சம் இந்தியர்கள் இருக்கின்றனர். இதில் 14 லட்சம் பேர் தமிழர்கள்" எனவும் சுட்டிக்காட்டியிருக்கும் சாமிவேலு, "இந்த நிலையில் அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும்" எனவும் சுட்டிக்காட்டினார்.

"விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் தமிழ்ச் சமூகத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்" எனவும் அறிக்கை ஒன்றில் டாத்தோ சாமிவேலு வலியுறுத்தியிருக்கின்றார்.

சிறிலங்கா படையினர் இனப்படுகொலை ஒன்றைச் செய்துள்ளனர் எனவும் குற்றம் சாட்டிய சாமிவேலு, அதற்குரிய தண்டனை அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

வன்னியில் இடம்பெற்ற போரின்போது சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ள போர்க் குற்றங்கள் தொடர்பாக ஜெனீவாவில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை தொடங்கவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் ஆராயப்படவிருக்கும் பின்னணியில் இதற்கு எதிரான காய்நகர்த்தல் ஒன்றை சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ளது.

இதன்படி ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் மற்றொரு நாடு தலையிட முடியாது என்பதை வலியுறுத்தும் யோசனை ஒன்றை இந்தக் கூட்டத் தொடரில் சமர்ப்பிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு மலேசியா உட்பட 12 நாடுகள் ஆதரவைத் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்தப் பின்னணியிலேயே இதற்கு மலேசியா ஆதரவளிக்ககக்கூடாது என அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான டாத்தோ சாமிவேலு இப்போது தெரிவித்திருக்கின்றார்.


No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.