Sunday, May 24, 2009

எங்களோடு சேருங்கள்: டக்ளசுக்கு மகிந்த அழைப்பு

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியின் தலைவரும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்படுமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கேட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளை அழித்துவிட்ட நிலையில் தமிழர் தரப்பில் சிறிய கட்சிகள் எதுவும் தேவையில்லை எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து வடபகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச டக்ளசிடம் கேட்டதாகவும் கொழும்பில் ஈ.பி.டி.பி. வட்டாரங்கள் கூறுகின்றன.

அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு கேட்டமையினால் டக்ளஸ் தேவானந்தா குழப்படைந்துள்ளார் என்றும் அதேவேளையில் சிறிலங்காவில் நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைகள் தேவையில்லை என்றும் டக்ளஸ் தேவானந்தாவிடம் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச எடுத்துக் கூறியதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.