Sunday, May 24, 2009

புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளார் எனக் கூறிய தமிழ் இளைஞர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனக்கூறிய தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறக்கோட்டை காவல்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
புறக்கோட்டையில் உள்ள நடைபாதை வியாபாரம் செய்யும் தமிழ் இளைஞன் ஒருவர் அங்கு நின்ற சிலரிடம் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை என்றும் எவரும் பயப்படவேண்டாம் எனவும் கூறியிருக்கின்றார்.

அப்போது அருகில் வியாபாரம் செய்துகொண்டிருந்த தொப்பி அணிந்த தமிழ் பேசும் இளைஞன் ஒருவர் புறக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக நடைபாதை வியாபாரம் அமைந்துள்ள இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்து குறித்த தமிழ் இளைஞனை கைது செய்தனர்.

அவர் தற்போது புறக்கோட்டை காவல்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து கோட்டை புறக்கோட்டை பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் பிரபாகரன் உயிருடன் இருப்பது பற்றி எதுவுமே பேசுவதில்லை.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.