Wednesday, May 20, 2009

பிரபாகரன் என்று காட்ட பட்ட உடல் அவசர அவசரமாகப் புதைக்கும் இலங்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ‘பிரபாகரன் உடல் இதுதான்’ என்று கடந்த இரு தினங்களாக மீடியாவுக்கு காட்டிவந்த இலங்கை ராணுவம், இப்போது ‘அதை’ அவசர அவசர நூற்றுக்கும் மேற்பட்ட போராளி பிணங்களுடன் சேர்ந்து புதைக்கப் போவதாக அறிவித்துள்ளது.

நேற்று நந்திக் கடல் பகுதியில் நடந்த சண்டையில் பிரபாகரனை சுட்டுக் கொன்றதாக ராணுவம் அறிவித்தது. ஆனால் ராணுவம் காட்டிய உடல் மற்றும் முகம் பிரபாகரனுடையது இல்லை என்ற சந்தேகம் தீவிரமாகிவிட, அது பிரபாகரன் போல மாஸ்க் பொருத்தப்பட்டது என்ற சந்தேகம் கிட்டத்தட்ட ஊர்ஜிதமாகியது.

மீடியாவும் இதுகுறித்து வலுவான கோள்விகளை எழுப்ப திணறிய ராணுவம், உடனடியாக நேற்றுமாலை உடைகள் அகற்றப்பட்ட வயதான மனிதர் ஒருவரது உடலைக் காட்டி இதுவே ‘பிரபாகரன் உடல்’ என்றும், அவரை கருணா மற்றும் தயா ஆகியோர் அடையாளம் காட்டியதாகவும் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

பிரபாகரன் இறந்த 2 மணிநேரத்துக்குள் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டுவிட்டதாகவும் அறிவித்துள்ளது. இந்த அறிக்கையை இந்தியாவுக்கும் அனுப்பி வைக்கப் போகிறதாம். ஆனால் டிஎன்ஏ சோதனை செய்யும் வசதியே இலங்கையில் இல்லை என்பதும் நிபுணர்கள் மூலம் மீடியா உறுதி செய்துவிட்டது.

இந்த நிலையில் ‘பிரபாகரன் உடலை’ உடனடியாக புதைத்துவிட ராணுவம் முடிவு செய்துள்ளது. அந்த உடல் கண்டெடுத்ததாகக் கூறப்படும் நந்திக் கடல் பகுதியிலேயே, மற்ற போராளிப் பிணங்களுடன் புதைக்கப்பட உள்ளதாகவும், பிரபாகரன் புதைக்கப்பட்ட இடத்துக்கென்று தனியான அடையாளம் எதுவும் தரப்படாது என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.

பிற்காலத்தில் பிரபாகரன் நினைவிடம் என்று தமிழ் உணர்வாளர்கள் கிளம்பிவிடக்கூடாது என்பதாலேயே இப்படி கூட்டாக அடக்கம் செய்வதாக சிங்கள ராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த உடலை பிரபாகரன் உறவினர்கள் யாருமே அடையாளம் காட்டவில்லை, சொந்தம் கொண்டாடவில்லை. இதுபோன்ற மிக முக்கியமான தலைவரின் உடலை அவசர அவசரமாக புதைக்க வேண்டியதன் காரணம் என்னவென்பது இப்போதாவது தமிழ் சமுதாயத்துக்கு விளங்கியிருக்கும் என நினைக்கிறோம். இதற்கு மேலும் பிரபா உடல் என்று எதையாவது காட்டினால் அதைச் சரிகட்ட தொடர்ச்சியாக பொய்களை ஜோடிப்பதில் உள்ள சிரமம் காரணமாக ஒரேயடியாக எல்லைவற்றையும் மண்மூடி புதைக்கப் பார்க்கிறது ராணுவம்.

பிரபாகரன் உடலைப் பார்க்க வேறு சர்வதேச ஊடகங்களோ, நடுநிலையாளர்களோ இதுவரை அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபாகரனைக் ‘கொன்று விட்டார்கள், இப்போது புதைக்கவும் போகிறார்கள்…’ இவற்றை எங்கோ ஓரிடத்திலிருந்து புன்னகையுடன் பிரபாகரன் பார்த்துக் கொண்டிருப்பார் என்பது மட்டும் உண்மை என்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.