Wednesday, May 20, 2009

நெதர்லாந்தில் துயரநாள் - மே 22

தாயகத்தில் அனைத்துலகத்தால் பாவனைக்குத் தடைசெய்யப்பட்ட கனரக, நாசகார, இரசாயன ஆயுதங்களைப்பாவித்து நாகரிகமுள்ள மனிதகுலம் வெட்கித்தலைகுனியும் பாரிய தமிழினப்படுகொலைகளை அரங்கேற்றிவிட்டு, அதனை அநாகரிகமான பேரினவாத பாசிசசிங்களஅரசானது தனது அரசின்சாதனையாக தமிழினத்தின் சாம்பல்மேட்டிலிருந்து வெற்றிவிழாவாக மே 22ம் நாள் கொண்டாடவுள்ளது. வன்னியில் தமிழர்களின் சதைக்குவியல்கள் இன்னும் குவிந்துகிடக்கின்றன. அழுகியஉடல்களிலிருந்து இன்னும் நாற்றமெடுக்கின்றன. இரத்தவாடைகள் இன்னும் வீசுகின்றன. மரணஓலங்கள் இன்னும் கேட்கின்றன. இவற்றின்மத்தியில்நின்றுகொண்டு இவ்விழாவை இப்பாசிசஅரசு நடாத்துகின்றமையானது தமிழர்களின் ஆன்மாவை மேலும் உலுப்பியெடுக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், அநாகரிகமுறையில் இப்பாரிய படுகொலைகளை அரங்கேற்றிய (அ)சிங்களத்தின் கொடியை வார்த்தைகளில் சொல்லமுடியாத பெரும்வேதனையை மனதிற்குள்வைத்து குமுறிக்கொண்டிருக்கும் தாயகத்தில் வாழும் தமிழ்மக்களிடம் விற்று, இவ்அசிங்கக்கொடியை இந்நாளில் அவர்களின் வீடுகளில் ஏற்றுவதற்கு வற்புறுத்தப்படுகின்றார்கள்.

எனவே, மே22 (வெள்ளி) அன்றையநாளை துயரநாளாக புலம்பெயர்ந்ததமிழ்மக்கள் கடைப்பிடிக்கவுள்ளார்கள். இந்நாளில், (அ)சிங்களஅரசினால் இனப்படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப்பொதுமக்களையும் தளபதிகள், போராளிகளையும் நினைவுகூறவுள்ளார்கள்.

எனவே, இந்நாளில் தமிழர்களின் வீடுகளில் கறுப்புக்கொடிகளையும் பறக்கவிடுமாறும் கறுப்புஉடைகளை அணிந்து வெளியில்செல்லுமாறும் வாகனங்களில் செல்பவர்கள் கறுப்புக்கொடிகளைக்கட்டி பறக்கவிட்டு பயணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

மேலும்,

இத்துயரநாளில் (22.05.2009, வெள்ளி) நெதர்லாந்தில் டென்காக்கிலுள்ள நாடாளுமன்றமுன்றலில் மதியம் 2மணிக்கு கறுப்பு உடையணிந்து அனைவரையும் ஒன்றுகூடுமாறும், வரும்பொழுது பூக்களையும் மெழுகுதிரிகளையும் கொண்டுவருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

நெதர்லாந்துத்தமிழ்அமைப்புக்களின் கூட்டமைப்பு.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.