இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க, நோர்வேயிடம் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அழைக்கும் நோக்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் மிலிந்த மொரகொடவை நோர்வேக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நோர்வே விஜயத்தை கடுமையான சாடிய இலங்கை அரசாங்கம், இரகசியமான முறையில் மிலிந்த மொரகொடவை நோர்வேக்கு அனுப்பி வைகக்கத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் போது நோர்வேயிடம் பெற்றுக்கொள்ளக் கூடிய ஒத்துழைப்பு குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
No comments:
Post a Comment