Sunday, May 31, 2009

வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களை எதிர்நோக்கக் கூடிய வகையில் படைகள் பலப்படுத்தப்பட வேண்டும்: அரசாங்கம்

வெளிநாட்டு சக்திகளினால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை எதிர்நோக்கக் கூடிய வகையில் படைத்தரப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் படையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும், நவீன ரக யுத்த உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் போது பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், அரசாங்கத்தின் திடமான கொள்கைகளினால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்ததென உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

வான் மற்றும் கடற்படைகளின் வலுவையும் மேலும் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாடுகளினால் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதித்திட்டங்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய விசேட திட்டமொன்றும் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.