Thursday, May 21, 2009

பிரான்ஸ், டென்மார்க், அவுஸ்திரேலியா,கனடா நாடுகளில் நாளை துக்கதினம் அனுஷ்டிப்பு

சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பில் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து பிரான்ஸ், டென்மார்க்,அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் நாளை (மே 22) புதன்கிழமை மாபெரும் துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
பிரான்சில் மே 22ம்,23ம் திகதிகளில் மாபெரும் இருநாள் மக்கள் பேரெழுச்சி

தமிழர்களின் விடுதலை உணர்வைவெல்ல நினைத்து தோற்றுப்போன சிங்களதேசம் மிலேச்சத்தனமான தனது நரபலி வெற்றியை தமிழ் மக்களின் செங்குருதியில் நின்றபடி கொண்டாடவுள்ள நிலையில் இந்த வெற்றியை அனைத்து தமிழ் மக்களும் எதிர்த்து நிற்கின்றனர். உலகெல்லாம் வாழும் ஈழத்தமிழர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுகூடும் இந்த நாளில் அனைத்து மக்களும் எழுச்சியோடு திரழ்வோம்.

மானிட நாகரிகம் அற்று சிறிலங்கா அரசு மாபெரும் மனிதப்படுகொலையை நடாத்தி முடித்து வெற்றியை கொண்டாட நினைத்துள்ளது, அவர்கள் கொண்டாடும் இழிநிலை வெற்றியை உலகத்தமிழினம் கறுப்பு நாளாக கடைப்பிடிக்கிறது. பிரான்சில் 22ம் திகதி வெள்ளிக்கிழமை 15மணிக்கு பிரான்சின் நாடாளுமன்றம் அமைந்துள்ள (Assemblee nationale) பகுதியில் கறுப்பு நாள் நினைவு கூரப்படவுள்ளது.

இதே வேளை 23ம் திகதி சனிக்கிழமை ஈழத்தமிழர்வரலாற்றில் இது வரை நடைபெற்றிராத பெரு நிழ்வாக பிரான்சின் வரலாற்றுப்புகழ்மிக்க விளையாட்டு திடலான Stade Charlty மைதானத்தில் பிற நாட்டு உறவுகளும் கலந்து கொள்ளும் மாபெரும் மக்கள் பேரழுச்சி நிகழ்வு.

உலகின் மிகப்பெரும் விடுதலை அமைப்புக்கள் தமது விடுதலைக்கான குரலை பிரான்சுமண்ணின் மத்தியில் நின்றபடி உரத்துக்கூறிய வரலாற்று அமைவிடமான இவ்விடத்தில் நின்றுகொண்டு தமிழ் மக்களின் விடுதலைப்பேரவாவை, சுதநதிர வேட்கையை, அரசியல் அபிலாசைகளை உரக்கச்சொல்வதற்கு உறுதியோடும் உணர்வோடும், ஓர்மத்தோடும் படை எடுப்போம்.

பிரான்சின் பாரிசு மாநகர சபையின் பேராதரவோடு நடைபெறவிருக்கும் மக்கள் பேரணியோடு அமைந்த ஒன்றுகூடலில் அனைத்து உறவுகளும் அணிதிரளுங்கள்.

பிரான்சில் ஐரோப்பா தழுவிய ரீதியில் மக்கள் கலந்து கொள்ளும் மே 23ம் நாளில் அடங்காப்பற்று மாபெரும் பேரணியும் எழுச்சி நிகழ்வும் உலகத்திற்கு முக்கிய செய்தியை கூறவுள்ளது எனவே அனைவரும் தயாராகுவோம்.

கவனயீர்ப்பு துயர நாள்

சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பில் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்தும், இன அழிப்பாளர்களை உலகக் குற்றக் கூண்டில் நிறுத்தி தமிழின இருப்பை உறுதி செய்ய உறுதி எடுத்துக் கொள்ளும் நாள்

டென்மார்க் தமிழ்அமைப்புக்களும், திசைகள் இளையோர் அமைப்பும் இணைந்து நடாத்தும் மாபெரும் கவனயீர்ப்பு துயரநாள்.

இடம் : - டென்மார்க் பாராளுமன்றம் முன்பாக
காலம் :-22.05.09 வெள்ளிக்கிழமை
நேரம் :- காலை 11-00 மணி

அனைவரையும் கறுப்புடையணிந்து, கறுப்புகொடியுடன்,தீப்பந்தங்கள் ஏந்தி வருமாறு வேண்டப்படுகின்றனர்.

அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் நாளை வெள்ளிக்கிழமை "தமிழர் தேசிய துக்கதினம்

அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் நாளை வெள்ளிக்கிழமை "தமிழர் தேசிய துக்கதினம்" அனுஸ்டிக்கப்படவிருக்கிறது.

சிறிலங்கா இனவாத தேசம் நாளை "சிறிலங்கா தேசிய வெற்றிநாள்" கொண்டாடவிருக்கும் நிலையில்,அதனை எதிர்த்து புலம்பெயர் தேசம் எங்கும் தமிழர்கள் துக்கதினம் அனுஸ்டிக்கவிருக்கின்றனர்.

அதேவேளை இது கலங்கி நிற்கும் தருணம் அல்ல என்பதையும்,புலம்பெயர் தமிழர் சேனை மனதில் கொண்டு வீறுகொண்டு எழவேண்டும் அன்பது காலத்தின் கட்டாயம்.

இதேவேளை மெல்பேர்ண் தமிழ் சமூகத்தினால் இந்த எழுச்சிநிகழ்வுகள் 3வது வாரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

"தமிழர் தேசிய துக்கதினம்"- வெள்ளிக்கிழமை(22May2009) மாலை 4மணி தொடக்கம் 7மணி வரை.
FEDERATION SQUARE

"உணர்வு எழுச்சிப் பேரணி"- சனிக்கிழமை(23May2009) காலை 11 மணி தொடக்கம் 2 மணிவரை.
FEDERATION SQUARE

"நினைவு வணக்க நிகழ்வு"- ஞாயிற்றுக்கிழமை(24May2009) 4மணி தொடக்கம் 7 மணி வரை.
HUNGARIAN COMMUNITY CENTRE,760 Boronia Road,Wantirna(Melway 63F5)

கனடா கால்கரியில் தமிழர்களின் துயர நாள் அறிவித்தல்‏

எமது தாயகத்தில் இன்னுயிர் நீத்த எமது தாயாக உறவுகளிற்காக தமிழர்களின் துயர நாள்

காலம் : மே 22 ம் திகதி வெள்ளி கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு

இடம் : City Hall ( Calgary )
800 Macleod Trail SE
Calgary T2P 2M5

கால்கரி வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் கருப்பு நிற உடை அணிந்து மெழுகுவர்த்தியுடன் வருமாறு வேண்டிகொள்ளபடுகின்றனர்.

தொடர்புகளிற்கு

Cory : 403 700 9375
Aravindan : 403 971 2596
Ravi : 403 999 8120
Vino : 403 472 4567

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.