
இலங்கையில் இடம்பெறுகின்ற யுத்தம் மற்றும் அதில் பலியான மக்களின் தொகை என்பவை தொடர்பில் ஏன் தகவல்களை பெறமுடியவில்லை என ஐக்கிய நாடுகள் சபையிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பாலஸ்தீன காஸா பிரதேசத்தில் இவ்வாறான தகவல்கள் வெளியான போதும் இலங்கையில் மாத்திரம் இவ்வாறான நிலை ஐக்கிய நாடுகள் சபைக்கு ஏற்பட்டுள்ளதென இனர் சிட்டி பிரஸ் செய்தியாளர்கள் நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கீ மூன்pடம் கேள்வி எழுப்பினர்.
எனினும் பான் கீ மூன் அந்த கேள்விக்கு நேரடி பதில் எதனையும் வழங்கவில்லை.
பான் கீ மூனின் இந்தசெயற்பாடு இன்னும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் உள்ள உறவை வெளிப்படுத்துவதாக தமிழ் தரப்புகள் சந்தேகிக்கின்றன.
அத்துடன் இந்த நகர்வுக்கு பின்னால் இந்தியாவின் அழுத்தம் உள்ளதாகவும் அந்த தரப்புகள் சந்தேகிக்கின்றன.
இதேவேளை தாம் இலங்கை ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடி இடம்பெயர்ந்தவர்களின் நிலை மக்களை பாதுகாப்பு வலயத்தில் இருந்து மீட்பது மற்றும் அவர்களுக்கான உணவு நிலை என்பவை தொடர்பில் பேசியதாக பான் கீ மூன் குறிப்பிட்டார்.
மனிதாபிமான பணியாளர்களை பாதுகாப்பு வலயத்திற்குள் அனுமதிக்கவேண்டும் என்ற வலியுறுத்தலை தாம் விடுத்ததாகவும் பான் கீ மூன் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் சபை விரைவில் இலங்கையின் உண்மை நிலையை அறிந்துவர மற்றும் ஒரு விசேட பிரதிநிதியை அனுப்பவேண்டும் என இனர் சிட்டி பிரஸ் செய்தியாளர்கள் கோரினர். ஏற்கனவே அனுப்பப்பட்ட விஜய் நம்பியார் தமது பயண விபரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.
அத்துடன் அவர் இந்திய முன்னாள் இராணுவ அதிகாரியான சதீஸ் நம்பியாரின் சகோதரரரும் இலங்கை அரசாங்கத்தின் உள்ள மூன்று சகோதரர்களின் நம்பிக்கையை கொண்டவருமாவார்.
இந்தநிலையில் அவருக்கு பதிலாக மற்றும் ஒருவரை அனுப்பி நிலைமையை ஆராயவேண்டும் என இனர் சிட்டி பிரஸ் செய்தியாளர்கள் கேட்டுக்கொண்டனர்.
No comments:
Post a Comment