சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர் ஒருவர் மோதல் இடம்பெறும் பகுதியில் இன்று எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் நீர் விநியோகம் தொடர்பான தொழில்நுட்பவியலாளராக கடமையாற்றியவர் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு பிள்ளையின் தந்தையான இவரும், இவரது தாயாரும் எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மோதல் வலயத்தில் இதுவரை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் 3 பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கான நிவாரண பணிகளில் ஈடுபட்டு வந்த அவுஸ்திரேலிய கரிட்டாஸ் தன்னார்வ அமைப்பின் உள்ளூர் பணியாளர் ஒருவர் கடந்த 8 ஆம் திகதி கொல்லப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர் 26 வயதான அந்தோனிப்பிள்ளை உதயராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நிவாரண பணிகளில் ஈடுபட வந்த தமது குழுவினருக்கு உதவியாகவும் வாகன சாரதியாகவும் இவர் பணியாற்றி வந்ததாக கரிட்டாஸ் அவுஸ்திரேலிய நிறுவனத்தின் அதிகாரியான ஜேக் குரூட் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment