வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியாவில் தங்கியிருந்த 61 முதியவர்களின் சடலங்கள், வவுனியா பொது மயானத்தில் ஒருங்கே பாரிய குழிக்குள் நேற்று முன்தினம் புதைக்கப்பட்டன.
இவர்கள், அனைவரும் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வுவுனியா நலன்புரி மையங்களில் தங்கியிருந்த நிலையில் இயற்கை காரணங்களால் மரணமாகினர்.
எனினும் அவர்களின் சடலங்களை யாரும் பொறுப்பேற்காத நிலையில் வவுனியா வைத்தியசாலையின் சவச்சாலையில் அதிக சடலங்கள் தேங்கியமையால் அவற்றை அரச செலவில் புதைக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நீதிவானும் இதற்கு அனுமதி வழங்கியிருந்தார்
No comments:
Post a Comment