Wednesday, May 13, 2009

முல்லைத்தீவு நந்திகடல் களப்பு பகுதிக்குள் படையினர் நுளைவு? இருதரப்புக்கும் கடும் மோதல்: புலிகளின் முயற்சி முறியடிப்பு என்கிறார் பிரிகேடியர்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கடைசி சூனியப் பிரதேசமான வட்டுவாகல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மோதல்கள்; இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. காயப்பட்ட படையினர் பெருமளவில் தெற்கு நோக்கி; கொழும்பிலும் அனுராதபுரத்திலும் அம்புலன்ஸ் வண்டிகள் தொடராக ஓடுகின்றன.

சுயாதீன தகவல்கள் வெளியாகவில்லை பெருமளவு மக்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என அச்சம்

நேற்று மாலை படைத்தரப்பு பெரும் முயற்சியின் மத்தியில் படைத்தரப்பு வட்டுவாகல் பகுதியைக் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் இன்று அதிகாலை 3மணியளவில் விடுதலைப் புலிகள் நடத்திய பதில் தாக்குதலில் வட்டுவாகல் விடுவிக்கப்பட்டது. ஆயினும் படைத்தரப்பு மீண்டும் காலை 5 மணியளவில் ஆரம்பித்த ராணுவ நடவடிக்கையின் பின்னர் 8 மணியளவில் வட்டுவாகலை படைத்தரப்பு மீண்டும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடைய வன்னியில் அனைத்துப் பகுதிகளிலும் அதாவது சூனியப் பிரதேசம் என அறிவிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெறுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரிய குண்டுத் தாக்குதல்களும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் இதுவரை குறிப்பிட்ட இலக்குகளில் 17 தடவைக்கும் மேற்பட்ட தடவைகள் விமானப்படை விமானங்கள் பாரிய குண்டுத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பதாகவும் கடற்பகுதிகளில் இருந்து கடற்படையினர் பல்குழல் பீரங்கிகளையும் கடற்படை கப்பல்களில் இருந்து மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்கள் பாரிய அளவில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. ஆனால் தகவல்கள் எவையுமே வெளியாகவில்லை.

இலங்கை பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ 48 மணி நேர கால அவகாசம் விடுத்துள்ள நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. 24 மணித்தியாலங்கள் தற்போது கடந்துள்ள போதிலும் அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் எதுவும் இடம்பெறலாம் எனவும் எந்த வித மாற்றங்களும் இடம்பெறலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.

அத்துடன் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள மோதல்களில் கணிசமான அளவு உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் அங்கிருந்து வெளியேற பாதுகாப்புத் தரப்பு பாதையொன்றை அமைத்து வழங்கும் எனப் பிரச்சாரம் செய்யப்பட்ட போதும் அவ்வாறான எந்தவித ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவி;ல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்றும் பொதுமக்கள் சுற்றிவளைக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே கரையான்மலை ஊடாக கடற்கரைப் பகுதியில் தரையிறங்க முற்பட்ட கடற்படையினர் மீது கரும்புலிகளது 4 தற்கொலைப்படகுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் படைத்தரப்பு பலத்த சேதங்களைச் சந்தி;த்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் படைத்தரப்பு தொடர்ந்தும் தனது முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கப்படும் அதேவேளை சில தகவல்கள் கடற்பகுதியில் தரையிறங்கியுள்ளதாகவும் கூறுகின்றன.

எனினும் சுயாதீனச் செய்திகள் எவையும் இதனை உறுதிப்படுத்தவில்லை.

இழந்த பிரதேசத்தை மீண்டும் கைப்பற்றும் புலிகளின் முயற்சி படையினரால் முறியடிப்பு - பிரிகேடியர் உதய நாணயக்கார

படையினரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள்ளிருக்கும் முல்லைத்தீவு, சரவாத்தோட்டம் பிரதேசத்தைக் மீண்டும் கைப்பற்றுவதற்காக விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை மேற்கொண்ட முயற்சி இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரை நீடித்த இந்த முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மூன்று தற்கொலைப் படகுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் சில படகுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளன. இதில் புலிகள் தரப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது

சரவாத்தோட்டம் பகுதியில் நிலைக்கொண்டுள்ள படையினரின் பாதுகாப்பு அரணைத் தகர்த்து அந்தப் பகுதியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியிலேயே விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை முயற்சித்தனர். இதில் நான்கு தற்கொலைப் படகுகள், 15 தற்கொலைக் குண்டுதாரிகள், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று இரவு 9 மணிமுதல் அதிகாலை 1.30 வரையான சுமார் நான்கு மணிநேரமாக இடம்பெற்ற படையினரின் இந்த முறியடிபபுத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

அதன்பின்னர் ஏனைய புலி உறுப்பினர்கள் அங்கிருந்து பின்வாங்கிச் சென்றனர்

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.