இலங்கையில்; பலஆயிரக்கணக்கான மக்கள் அகப்பட்டுள்ள குறுகியநிலப்பரப்பில கடுமையான சண்டைநடைபெறுவதால் இதுபற்றி ஐரோப்பியஒன்றியத்தில் உடனடியாக கலந்துரையாடுவதற்கு நெதர்லாந்தின் அபிவிருத்தி அமைச்சர் கூன்டேர்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவநாடுகளிற்கு அவசரஅழைப்பு விடுத்துள்ளார்.
ஏற்றுக்கொள்ளப்படமுடியாத மனிதாபிமானமற்ற நிலவரங்கள் இலங்கையில் நிலவுவதாகவும் சிறீலங்காஅரசும் விடுதலைப்புலிகளும் உடனடியாக போரைநிறுத்தவேண்டும் எனவும் ஊடகவியலாளர்களையும் உதவிநிறுவனங்களையும் இலங்கைஅரசு அனுமதிக்கவேண்டும் எனவும் கூன்டேர்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
அடுத்தவாரம் ஐரோப்பியஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் இதுபற்றி கலந்துரையாடுவதற்காக ஒன்றுகூடவுள்ளார்கள் எனவும் தெரிவித்த கூன்டேர்ஸ் அவர்கள் ஐ.நா பாதுகாப்புசபையிலும் இதுபற்றி கலந்துரையாடப்படுதல் அவசரமானது எனவும் கருத்துதெரிவித்துள்ளார். மேலும்- அவசரமாக இன்று (13.05.2009) புதன் நெதர்லாந்து நாடாளுமன்றத்திலும் காலை 10.30 மணிக்கு தமிழ்மக்களின்நிலைபற்றி ஒருவிவாதம் இடம்பெறுகின்றது.
நெதர்லாந்து நாடாளுமன்றமுன்றலில் தொடர்ந்து 11ஆவதுநாளாக உண்ணாநிலைப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கண்ணா- கல்பனா இருவரையும் சோசலிஸ்ற்கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினர் ஈர்காங் அவர்கள் இவ்விவாதத்திற்கு கலந்துகொள்ளமுன்பு சந்தித்து கலந்துரையாடியுமுள்ளார்.
No comments:
Post a Comment