இலங்கை அரசினால் அன்னையர் தினத்தில் கொன்றொழிக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புக்களை கண்டித்தும் தினந்தோறும் நடைபெறும் தமிழினப்படுகொலையை கண்டித்தும் கண்டனப்பேரணி ஒன்று ரொறன்ரோ மத்தியில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரகம் முன்பாக நேற்றைய தினம் இடம்பெற்றது. அங்கு இலங்கை அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் நடைபெறும் கொடூரக் காட்சிகளை மையப்படுத்தி கண்காட்சி ஒன்றும் இடம் பெற்றது. இக்கண்காட்சி பல்லின சமூகத்தினரின் கவனத்தை ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது
மாலை வேளையில் கண்காட்சியுடன் கூடிய இப்பேரணி குயின்ஸ் பார்க் பகுதியில் அமைந்திருக்கும் ஒன்ராரியோ பாராளுமன்ற முன்றலில் நிறைவடைந்தது.
அன்றிரவு அன்னையர் தினத்தில் உயிரிழந்த மூவாயிரத்துக்கும் அதிகமான உறவுகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அமைதி வணக்கமும் ஒன்ராரியோ பாராளுமன்ற முன்றலில் நடைபெற்றது.
No comments:
Post a Comment