சிட்னி மாநகரில் தமிழீழ தாயகத்தில் எமது மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை எடுத்துக்காட்டுவதுடன் எமது மக்களுக்கு நிரந்தர நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. |
சிட்னி மாட்டின் சதுக்கத்தில் ஸ்டொப் த வோர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இன்று இந்த பேரணியை முன்னின்று ஏற்பாடு செய்திருந்தனர். சங்கத்தை சேர்ந்தவர்கள் உட்பட பல அவுஸ்திரேலியர்களும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வக்கீல் ஃபிலிப் போல்ட்டன், தேவாலய உறுப்பினர் ரெவ் ஜோன் ஃபார் இ ஸ்டொப் த வோர் சங்க உறுப்பினர் ஃபிப் கென்மன், National Territory Education உறுப்பினர் மைக்கல் தொம்சன், கிறீன் கவுன்சில் உறுப்பினர் கிரிஸ் கரிஸ், Edmund Rice Centre உறுப்பினர் ஃபில் கிலன்டனிங் மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் இளையோர்கள் மருத்துவர் சாம்பவி பரி அட்ரியன் ஃபிரான்சிஸ் மயூரன் இளங்கோ ஆகியோர் உரையாற்றினர். இதில் உரையாற்றிய வக்கீல் ரெவ் ஜோன் ஃபார் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் ஏற்படுத்திய கொலைத் தாக்குதல்கள் கொடுமைகள் சட்டத்துக்கு புறம்பானவை என்பதை ஆணித்தரமாக வெளிப்படுத்தினார். கிறீன் கவுன்சில உறுப்பினர் கிரிஸ் கரிஸ் கிறீன் பார்ட்டி எமக்கு அதரவாக வெளியிட்ட அறிக்கையை வாசித்தார் அவுஸ்திரேலிய அரசாங்கம் நிதி கொடுப்பதன் மூலம் தமிழர்களின் அழிவுக்கு உதவுகிறார்கள் என்பதையும் இலங்கை அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்காமல் தமிழர்களின் அழிவுக்கு ஓரு காரணமாக இருப்பதை உரையாற்றிய அணைவரும் சுட்டிக்காட்டினர். உடனடியாக மருந்து மற்றும் உணவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய்ச்சேர வேண்டும் வெளிநாட்டு மனிதாபிமான அமைப்புக்கள் உடனே வன்னிக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் மற்றும் தடுப்பு முகாம்களில் இருக்கும் எமது உறவுகள் உடனே தமது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டம் புலம்பெயர் தமிழ் மக்களால் நடத்தப்படுகிறது எமது மக்கள் சுதந்திரமாக வாழும் வரை போராட்டங்கள் தொடரும் என்பதில் எமது புலம்பெயர் மக்கள் திடமாக இருப்பதை பெரும்திரளாக வந்த மக்கள் கூட்டம் பிரதிபலித்தது. உறவுகளை இலந்த வலி மனதில் இருந்தாலும் இலங்கை அரசாங்கத்தின் சுயரூபத்தை வெளி உலகுக்கு காட்டி தாயகத்தில் இருக்கும் எமது உறவுகளை காப்பாத்தி அவர்களுக்கு சுதந்திரமான வாழ்வை உடனடியாக அமைத்து கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக வீதிகளில் இறங்கி போராட தயாராகிவிட்டார்கள். தனி தமிழீழமே நிரந்தரமான முடிவு என்பதில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மாட்டின் சதுக்கத்தில் நடந்த நிகழ்வை தொடர்ந்து டவுன் கோல் வளாகத்தை நோக்கி “தமிழீழமே வேண்டும்”, “கெவின் ரோட் அழிவுக்கு துணை போக வேண்டாம்” என கோசங்கள் எழுப்பிய வண்ணம் பேரணியாக சென்றனர். அங்கு உரையாற்றிய தமிழ் இளையோர் தனி தமிழீழம் விரைவில் மலரும் அதற்கான ஏற்பாடுகளில் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள். |
Sunday, May 24, 2009
அவுஸ்திரேலியா, சிட்னியில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி
Subscribe to:
Post Comments (Atom)
***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment