கடந்த மாதம் புதுமத்தளான் பகுதியில் இருந்து தப்பிச் சென்ற 55 பேர் கொண்ட அகதிகளின் படகு திசைமாறி இந்தோனேசியக் கடற்பக்கமாகச் சென்றுள்ளது. இது ஆச்சே தீவுப்பகுதி்யில் கரை ஒதுங்கியதாக அறியப்படுகிறது. இருப்பினும் இதில் பலர் இளைஞர்களாகக் காணப்படுவதால் அவர்கள் விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என இலங்கை அரசாங்கம் இந்தோனேசிய அரசிடம் அறிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் தடுத்துவைக்கபட்டுள்ளனர்.
இந் நிலையில் தம்மை சட்டவிரோதமாக தடுத்துவைத்திருப்பதாகக் கூறி அகதிகள் அனைவரும் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் சிறுவர்களும், பெண்களும் அடங்குவதாக நிருபர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment