நேற்றைய தினம் நடைபெற்ற இந்த உரையாடலில், இலங்கையில் உடனடியாக அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறு அவர் அழுத்தம் கொடுத்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய வகையில் உடனடியாக தீர்வுத்திட்டம் ஒன்று முன்வைக்கப்படவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
தற்சமயம் சுற்றுப்பயணத்தில் இருக்கும் பான் கீ மூனுடன் தொடர்புகளை மேற்கொண்டு, இலங்கை நிலை குறித்து அறிந்து கொண்ட பின்னரே, அவர் இலங்கை ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டதாகக் கூறப்படுகிறது. இலங்கை நிலை குறித்து பான் கீ மூன் கடும் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.
No comments:
Post a Comment