Friday, May 22, 2009

பிரித்தானியாவில் ஜரோப்பிய கலைஞர்களின் வன்னி அவல பிரதிபலிப்பு

சிறீலங்கா அரசாங்கத்தினால் தங்கள் உறவுஇ உடமை மற்றும் சொந்த இடங்களை இழந்து தங்கள் நாட்டிலேயே அகதிகளாக அநாதைகளாக தடுப்புமுகாம்களில் முட்கம்பிகளுக்கு இடையே அல்லலுறும் தமிழ் மக்களை காப்பாற்றி அவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை வழங்குமாறு பிரித்தானியாவை வலியுறுத்தி இன்றும் பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சிறீலங்க ஆக்கிரமிப்பில் தவிக்கும் தமிழ் மக்கள் மற்றும் உலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு அடையாளம் இருப்பதை நிரூபிக்கும் விதமாக தமிழ் தேசியக்கொடியை பலர் தாங்கி நின்றனர். மதியம் 3 மணியளவில் பிரித்தானிய காவல்துறையினர் கொடியை பறி முதல் செய்ய வந்த வேளை மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இருந்த போதிலும் தேசியக்கொடியை தாங்கி நின்ற இளைஞர்களை புகைப்படம் பிடித்த காவல்துறையினர் அவர்கள் நாடாளுமன்ற சதுக்கத்தை விட்டு வெளியேறும் போது கைது செய்துள்ளனர்;. இதை பற்றி பயமற்ற தமிழ் மக்கள் தொடர்ந்து தமிழீழ் தேசியக்கொடியை தாங்கி நின்றனர்.

கடந்த மூன்று நாட்கள் போன்று நாளையும் (22-05-09) வன்னி மக்களின் அவலத்தை சர்வதேச சமூகத்திற்கு பிரதிபலிக்கும் முகமாக ஜரோப்பிய நாடக கலைஞர்கள் தங்கள் திறமையால் பிரதிபலிக்கின்றனர். இவர்களுடன் பிரித்தானிய வாழ் கலைஞர்களும் இணையவுள்ளனர். ஆகவே அனைத்து பிரித்தானிய வாழ் தமிழ் மக்களையும் இனிவரும் போராட்டங்களில் இணைந்து எங்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் படி பிரித்தானிய தமிழ் மாணவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.