புதுச்சேரி மாநிலத்தில் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பில் நேற்று மதியம் 1 மணிக்கு பிரச்சார பொதுக்கூட்டம் ஆரம்பித்தது. மாலை 5 மணி வரை இப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இயக்குநர் பாரதிராஜா இக்கூட்டத்திற்கு தலைமையேற்பதாக இருந்தார். ஆனால் அவர் நேற்று சென்னை வந்த சோனியாகாந்திக்கு கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.
இயக்குநர்கள் சீமான், ஆர்.கே.செல்வமணி, கவுதமன்; கவிஞர்கள் அறிவுமதி, சினேகன் உட்பட திரையுலகினர் பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.சீமான் இக்கூட்டத்தில் பேசும்போது, ‘'சோனியாகாந்தி வாக்கு கேட்டு சென்னை வந்தபோது சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. அது, ஈழத்தில் சிந்திய என் சொந்தங்களின் ரத்தம்.
நாங்கள் என் சொந்தங்களை இழந்துவிட்டு துக்க வீட்டில் இருக்கும்போது வாக்கு கேட்டு வருகிறார் சோனியா. எங்களிடம் வாக்கு இல்லை. வாய்க்கரிசிதான் இருக்கிறது''
ஈழத்தில் நேற்று எனது சகோதரர்கள் 3000 பேர் வரை சிங்கள இனவெறி இராணுவத்தால் கொலை செய்யப்பட்டுள்ளர். சிங்களவன் ஒரு நாளில் 5000 குண்டுகளை வீசி எந்தன் இனத்தை வதைகின்றான்.
இந்தநேரத்தில் வந்து இலங்கையில் யுத்த நிறுத்தத்தை நாம் தான் எற்படத்தினோம், ஈழத்தமிழர்கள் விடயத்தில் கரிசனையாகவே இருக்கின்றோம் என யாருக்கு கதை சொல்கின்றீர்கள்?
தமிழன் என்றால் என்ன அந்த அளவுக்கு அடி முட்டாளாக உங்களுக்கு தெரிகின்றதா என ஆவேசமாகப்பேசினார். இத்தனை துரோகங்களை செய்துள்ள காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இனி இல்லை என்ற நிலை எற்படவேண்டும் எனவும் சீமான் உணர்ச்சி பொங்க பேசினார்;.
இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறி வருகிறார். இது குறித்து இயக்குநர் சீமான், புதுச்சேரி மாநிலத்தில் இன்று நடந்த பிரச்சாரம் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பில் நடந்த இப்பொதுக்கூட்டத்தில் பேசும் போது அவர், ‘'தமிழ் பெருமகளே... இராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைக்க வேண்டாம்.
இந்திய இராணுவம்தான் முன்பு அமைதிப்படை என்கிற பேரில் என் இனமான தமிழ் மக்களை அழித்தது. என் சகோதரிகளை அவமானப்படுத்தியது. இப்போதும் இந்த இராணுவம்தான் என் இனமான தமிழ் மக்களை அழிக்கிறது.
அதனால் அந்த இராணுவத்தை அனுப்பி எங்களை கேவலப்படுத்த வேண்டாம். உங்களிடம் நாங்கள் வேண்டிக்கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றுதான். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை மட்டும் நீக்குங்கள்.
அது ஒன்று போதும். அதை மட்டும் செய்துவிட்டு நீங்கள் உட்கார்ந்து கொள்ளுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.அதன்பிறகு உலகமெங்கிலும் இருந்தும் பிரபாகரன் படை திரளும்'' என்று தெரிவித்தார்
No comments:
Post a Comment