Wednesday, May 13, 2009

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வவுனியா முகாம்களுக்கு விஜயம்

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்று, காலை வவுனியா நலன்புரி முகாம்களுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுள், அதன் தற்போதைய தலைவரும் செக் குடியரசின் பிரதிநிதியும் உள்ளடங்குகிறார்.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தில் தலைமைத்துவத்தை ஏற்கவுள்ள சுவீடன் நாட்டின் பிரதிநிதி, அதன் ஆணைக்குழுவின் பிரதிநிதி மற்றம் செயலாளர் காரியாலய பிரதிநிதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அவர்கள் வெளிவிவாகர அமைச்சர் ரோகித்த போகொல்லாகம மற்றும், வெளியுறவுச் செயலர் பாலித்த கோஹன ஆகியோரையும் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

இது தவிர இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து ஐரோப்பிய சங்க பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்களை மீட்டெடுப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என ஐரோப்பிய ஒன்றித்தின் பிரதிநிதிகளுக்கு தெளிவு படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் இந்த வருட இறுதிக்குள் 80 சதவீதமான மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியின் சிரேஷ்டட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் திஸ்ஸ விதாரண மற்றும் அமைச்சர் ஜி எல் பீரிஷ் ஆகியோரையும் இன்று ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.