Wednesday, May 13, 2009

முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது இன்று மீண்டும் அகோர எறிகணைத் தாக்குதல்: நோயாளர்கள் உட்பட 52 பேர் படுகொலை

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் இன்று முற்பகல் மீண்டும் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் மருத்துவர், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர், நோயாளர்கள் உட்பட 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 117 பேர் காயமடைந்துள்ளனர்.
'மக்கள் பாதுகாப்பு வலய'மான முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவந்த முல்லைத்தீவு பொதுமருத்துவமனை மீது இன்று புதன்கிழமை முற்பகல் 11:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை அகோரமாக நடத்தியுள்ளனர்.

இதில் மருத்துவர், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர், காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், நோயாளர்கள், உதவியாளர்கள் உட்பட 52 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 117 பேர் காயமடைந்துள்ளனர்.

உடலங்கள் ஆங்காங்கே சிதறிய நிலையில் கிடக்கக் காணப்படுவதாகவும் தொடர்ந்தும் எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி வருவதால் மீட்புப் பணிகளில் ஈடுபட முடியாத நிலை காணப்படுவதாக வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.