Monday, May 25, 2009

பிரித்தானியாவில் 7 வது நாளை எட்டியுள்ள ரிம் மார்டினின் பட்டினி போராட்டம்

தமிழீழ தனியரசு அமைப்பது மூலமே சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்த முடியும் என்ற உறுதிப்பாட்டுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் கோரிக்கை கோசங்களை பிரித்தானிய சமூகத்திற்கு முன்வைத்தனர். 

அத்துடன், கடந்த 168 மணித்தியாலங்களாக தமிழ் மக்களுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரித்தானியரான ரிம் மார்டின் அவர்கள்,

உடனடியாக சர்வதேசத்தின் செயற்கை கோள் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை பெற்று தரவேண்டும்.

சர்வதேச ஊடகங்கள் மற்றும் அமைப்புகள் எதுவித தடையுமின்றி சிறீலங்காவில் பணி புரிய அனுமதிக்கவேண்டும்

அகதிகளாக்கப்பட்டு பாடசாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும் வாழும் தமிழர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி செய்து கொடுக்கவேண்டும்

சிறிலங்கா அரசாங்கத்தின் ஆலோசகர் சதீஸ் நம்பியாரின் அண்ணனும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியுமான விஜய் நம்பியார் மீது பொது விசாரணை செய்யவேண்டும்

ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்.

நேற்று நாடாளுமன்ற சதுக்கத்தில் நடைபெற்ற தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்க அங்கு சமூகமளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் குயூச் அவர்கள் மக்கள் முன் உரையாற்றுகையில்,

 “இனி தமிழீழத்திற்கான போராட்டம் இளையோர் கைகளில் உள்ளது. ஆகவே உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் இளையோர் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் போராட்டத்தை வென்றெடுக்க வேண்டும். வருகின்ற வாரம் விடுமுறை ஆகினும் தமிழ் மக்கள் போராட்டத்தை தொடரவேண்டும்.

உங்கள் காணாமல் போன உறவுகளின் விபரங்களை தந்தால் எம்மால் ஆன உதவியை பெற்று தரமுடியும். அத்துடன் உங்களிடம் சிறிலங்காவில் இடம்பெறுவது இனப்படுகொலை தான் என்பதற்கான அத்தாட்சிகள் இருப்பின் அதை வைத்து வழக்கறிஞர்கள் மூலம் வாதாடலாம்” என்று கூறினார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.