Monday, May 25, 2009

நோர்வேயில் சிங்கள பேரினவாத வெறிக்கு பலியான தாயக உறவுகளின் உயிர்வலி சுமந்த நினைவு வணக்கம்

சிறிலங்கா அரச பயங்கரவாத்தின் கொடிய இன அழிப்பு வன்போரில் ஈவிரக்கமின்றி கொன்றழிக்கப்பட்ட அனைத்து மக்களின் உயிர்வலி சுமந்த துயர் நினைவுகளோடும், இறுதி மூச்சுவரை நிமிர்ந்து நின்று போராடிய போராளிகளின் நினைவுகளோடும் வணக்க நிகழ்வு இடம்பெற்றது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஒஸ்லோவில் அமைந்துள்ள Valle Hovin  பெருமண்டபத்தில் பல ஆயிரம் தமிழ் மக்கள் கூடி, மக்களுக்கும் மாவீரர்களுக்கும் மலர் தூவி கண்ணீர் மல்க வணக்கம் செலுத்தினர். 

மனித குலம் வெட்கித் தலைகுனியும் வகையில் ஈழத் தமிழினத்தின் மீது ஒரு பாரிய இன அழிப்பு யுத்தத்தினை நடாத்தி முடித்துள்ளது பௌத்த சிங்கள இன மேலாதிக்க அரசு. 

அனைத்துலக சமூகத்தின் மௌனமும் சிறிலங்கா பேரினவாதத்தின் இன அழிப்பு வன்போருக்கும், சாட்சியங்களற்ற படுகொலைகளுக்கும், அனைத்துலக போர் நெறிகளை மீறிய காட்டுமிராண்டித் தனங்களுக்கும் துணை நின்றிருக்கின்றன. 

கடைசி நேர இனவெறித் தாக்குதலில் எத்தனை ஆயிரம் உயிர்கள் பலியெடுக்கப்பட்டன?

படுகாயமடைந்த பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு என்ன கதி நேர்ந்தது? 

பதுங்குகுழிகளில் உயிர்களைக் கையிலேந்தி நின்ற மக்களுக்கு என்ன நேர்ந்தது? 

என்ற எந்தவித தகவல்களும் அறிய முடியாத வெறுமையும் துயரும் சூழ்ந்த நிலையில் உலகத் தமிழனம் குமுறி நிற்கின்றது. 

பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா, அருட்தந்தை இன்பநாதன், பூசகர் ஜெயம் மற்றும் யாழ். மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் நினைவுரை ஆற்றினர். 

போராளிகளும் மக்களும் கொடிய எதிரியின் ஓயாத கொலைவெறித் தாக்குதல்களுக்கு மத்தியிலும், நாசகார குண்டுகளுக்கு மத்தியிலும் விடுதலை மீதான நம்பிக்கையோடு நிமிர்ந்து நின்றவர்கள். 

அவர்களின் அர்ப்பணிப்புகள் ஈடு இணை அற்றவை. 

அவர்களுக்கு ஆழ்மன வணக்கங்களை செலுத்தும் அதேவேளையில், தமிழீழ மக்களின் விடுதலை என்ற உன்னத உயிர்ப்பு மிக்க அவர்களின் கனவு நிறைவேற நம்பிக்கையுடனும் உறுதியுடனும் செயற்படுவதே மாவீரச் செல்வங்களுக்கும், மக்களுக்கும் நாம் செலுத்தும் உண்மையான காணிக்கையாகும் என்ற உறுதியெடுத்தலுடன் நினைவு வணக்க நிகழ்வு நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.