அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முயன்ற 55 இலங்கையர்கள் இந்தோனேசியாவின் மேற்குக் கடல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே மாகாணத்தின் கரைப்பகுதியில் 2 கிலோமீற்றர் தூரத்தில் சேதமடைந்த மரப்படகொன்றில் இவர்கள் 55 பேரையும் மீனவர்கள் பார்த்துள்ளனர்.
நேற்று அதிகாலை 6 மணியளவில் இக்குடியேற்ற வாசிகளை இடைமறித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவுக்கு தொழில்வாய்ப்புக்காக அவர்கள் செல்வதற்கு முயன்றனர் என்று இந்தோனேசியாவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அரிசு பியான்டோ கூறியுள்ளார்.
தங்களுடன் வந்த சிலர் காணாமல் போய்விட்டதாக இந்த இலங்கையர்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேசமயம் மற்றொரு படகு இலங்கையருடன் அவுஸ்திரேலியாவை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பஜுடிபட்ட குழுவினர் இலங்கையை விட்டு மே மாதம் 2 ம் திகதி புறப்பட்டுள்ளனர். மே 8ல் மலேசியாவில் தங்கியுள்ளனர். கைதான 55 பேரும் சுமார் 25-30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத குடியேற்றவாசிகளாகச் செல்வோர், புகலிடம் நாடிச் செல்வோருக்கு பிரதானமான இடைத்தங்கல் நிலையமாக இந்தோனேசியா உள்ளது. என்று ஏ.எவ்.பி. செய்திச்சேவை தெரிவித்தது
No comments:
Post a Comment