கோலாலம்புரில் அமைந்துள்ள சிறிலங்கா தூதரகத்தக்கு முன்பாக கூடிய ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தமிழீழத்தேசியயக்கொடி ஈழத்தில் மக்கள் படும் அவலங்களின் விவரணப்படங்கள் தேசியத்தலைவரின் உருவப்படங்கள் போன்றவற்றை தாங்கி நின்றவாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.
இதன்போது சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தவின் சவப்பெட்டி ஊர்வலம் நடைபெற்று தூதரகத்துக்கு முன்பாக ஆவேசம் கொண்ட மக்களால் தீயிட்டு எரிக்கப்பட்டது.அத்துடன் கருணாநிதி சோனியாகாந்தி மன்மோகன் சிங் ஆகியோரின் பொம்மைகள் படங்களுக்கு ஆவேசம் கொண்ட மக்களால் செருப்படி வழங்கப்பட்டது
மலேசியப்பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இப்பேரணிநடைபெற்ற போதும் ஆவேசம் கொண்ட மக்கள் எமது உறவுகள் சிறிலங்காவில் கொல்லப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமெனக்கூறியவாறு தூதரகத்துக்கு உள்ளே நுழைய முயன்றனர். இதன்போது பொலிசார் தடியடி நடத்தினர்.








No comments:
Post a Comment