சிறிலங்கா அரசு ஏனைய வல்லரசு நாடுகளுடன் சேர்ந்து தமிழின அழிப்புச்செய்து தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, திறந்த வெளிச்சிறைக்குள் தமிழர்களை அடைத்து பொய்ப்பரப்புரைகளைச்செய்து இன்று கொட்டமடிக்கிறது சிங்களம்.
தனது உயிரினும் மேலான மானத்தோடு தனது உறவுகளைக்காப்பதற்காக புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் எழுர்ச்சிப்போராட்டம் இரவு பகலாக தொடற்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பிரான்சின் நாடாளுமன்றம் அமைந்துள்ள (Assemblee nationale) பகுதியில்; இடைவிடாது மக்கள் எழுர்ச்சிப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நேற்று மாலை அங்கு மிகப்பெருமளவில் கூடிய மக்கள் சிறிலங்கா அரசால் படுகொலைசெய்யப்பட்ட மக்களுக்கு சுடர் வணக்கத்தை மேற்கொண்டிருந்தார்கள். எனவே
தற்போது போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பகுதிக்கு அனைத்து பிரான்சு வாழ் மக்களும் உடனடியாக விரைந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment