இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பு இயக்கம் வரும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 21ம் தேதி எழுச்சிப் பேரணி நடத்தப்படுகிறது என்று அறிவித்துள்ளது. மேலும் கூறும்போது:
உலக மகா வீரரான பிரபாகரன் அவர்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் அவர் தப்பி ஓட முயன்றபோது கட்டுக்கொல்லப்பட்டதாக சிங்கள அரசு கூறும் நச்சுப் பிரச்சாரத்தை இந்தியாவில் குறிப்பாக தில்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தொலைக்காட்சி ஊடகங்களும், சில ஏடுகளும் ராஜபக்சே அரசின் கைக்கூலிகளாக வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன.
ஈழத்தமிழர்களை அழிக்க சிங்கள அரசு நடத்துகிற இனக்கொலை யுத்தத்தை முழுக்க முழுக்க இயக்கியதும், ஆயுதங்கள் வழங்கியதும் இந்திய அரசுதான் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன.
உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனமெல்லாம் நொறுங்கி மரண இருளாக துயர்மேவியுள்ள இந்நிலையில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தி அந்த இருளுக்கு மத்தியில் வெளிச்சமாகத் தென்பட்டாலும் கொடூரமாகக் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்காகவும், போராளிகளுக்காகவும் வீரவணக்கம் செலுத்த வேண்டியது நமது கடமையாகும். ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டுவிடாமல் எஞ்சி உள்ள தமிழர்களையாவது காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு துன்பம் சூழ்ந்த வேளையில் குரல் கொடுத்த அமெரிக்க அரசையும், பிரிட்டன் அரசையும் வற்புறுத்தவும்; இதுவரை கடமையாற்றாத ஐ.நா. மன்றத்தை இனிமேலாவது தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தவும் தாய்த் தமிழகத்து மக்கள் நம்சொந்தச் சகோதரர்களை பாதுகாக்க சூளுரைக்கச் செய்யவும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 21ம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் சென்னையிலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எழுச்சிப் பேரணியை நடத்தப்படுகிறது. ஏழுச்சிப் பேரணியில் எல்லாதரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment