Saturday, May 16, 2009

பிரான்சில் 41வது நாளாகத்தொடரும் போராட்டம்.

சிறிலங்கா அரசு இறுதி யுத்தம் என்று கூறிக்கொண்டு மாபெரும் இன அழிப்பைச்செய்து வரும் நிலையில் உலகம் வெறும் கண்டன அறிக்கைகளினூடே காலம் கடத்துகிறது. இன் நிலையில் புலமபெயர் வாழ் தமிழ் மக்கள் தொடற்சியான எழுர்ச்சிப்போராட்டங்களை இடைவிடாது நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

பெரு வரலாற்றைப்படைத்து விட்ட பிரான்சின் தொடற்சியான போராட்டம் இன்று 41வது நாளாகத்தொடரும் அதேவேளை பல இடையூறுகள் வேதனைகளைத்தாங்கி 39வது நாளா செல்வக்குமார்,நவனீதன் ஆகியோரின் உண்ணா நிலைப்போராட்டம் தொடர்கின்றது.

சிறிலங்கா அரசு அதன் முழுப்பலத்தோடு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் எம்மில் பலர் இன்னும் வீட்டுக்குள்ளேயே உறங்கிக்கிடக்கிப்பதாகவும், குறிப்பிட்ட மக்கள் மட்டும் தொடற்சியாகப்போரடும் நிலையில் ஏனையவர்கள் இன்னும் இன உணர்வு கொள்ளாமல் வீதிகளில் நின்று பேசிக்கொண்டிருப்hதாகவும், தாயகத்தில் உயிர் விடும் ஒவ்வொரு தமிழனின் மானத்திலும் வீரத்திலும், இரத்தத்திலும் உருவாக்கப்ட்ட வாழ்வையும், இரவல் நிழலில் இளைப்பாறிக்கொண்டும், இப்போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் விடுப்புப்பார்த்தபடி காலம் கடத்துவாகவும் தொடற்சியாக மக்கள் எழுர்ச்சிப்போராட்டங்களில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

பாரிசின் லா சப்பல் பகுதியல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவும், முடிந்தளவு அழுத்தத்தை சர்வதேசத்திற்கு கொடுக்கவும், எமது மக்களைக்காப்பாற்றும் தார்மீகப்போராட்டத்தில் அனைத்து மக்களையும் அவசர கால நிலை கருதி கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர

 

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.