Wednesday, May 13, 2009

முள்ளிவாய்கால் மருத்துவமனைத் தாக்குதலில் மருந்துவர் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் உட்பட 38 பேர் பலி!

இன்று, புதன்கிழமை, முள்ளிவாய்க்கால் பாடசாலையில் இயங்கும் தற்காலிக வைத்தியசாலையானது மீண்டும் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. இதில் காத்திருந்த 38 நோயாளிகளும் செஞ்சிலுவைச் சங்க பணியாளர் ஒருவரும் பலியாகியுள்ளனர்.



பல எறிகணைகள் வைத்தியசாலை அமைந்திருக்கும் இடத்தில் விழுந்து வெடித்துள்ளதாகவும், இறந்தவர்களினதும் காயப்பட்டவர்களினதும் எண்ணிக்கை 100 வரை இருக்கலாம் என்றும் நோயாளி ஒருவர் கூறியுள்ளார். இதில் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் ஒருவர் பலியானதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.



இதுதொடர்பாக, மனநோயாளிகளுக்கு உதவி வழங்கும் மையத்தில் காத்திருந்த 39 பெண் நோயாளிகள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், 40 க்கும் மேலான நோயாளிகள் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் கூறியுள்ளதாக தெரியவருகிறது.



மருத்துவ பணியாளர்கள் மற்றும் ஏனைய நோயாளிகள் பதுங்குகுழிகளுக்கே முடங்கிக் கிடப்பதாகவும், பாதிக்கப்பட்ட உயிர்களைக் காப்பாற்ற இயலாமல் உள்ளதாகவும் தெரியவருகிறது.



ஒரு வாரத்திலே 3 தடவைகள் இவ்வைத்தியசாலை இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது இங்கே குறிப்பிடத் தக்கது

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.