Monday, May 4, 2009

வன்னியில் இன்று 20 நிமிடங்களில் மூன்று தடவைகள் வான்வழித் தாக்குதல்


வன்னியில் மக்கள் செறிந்துவாழும் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் 20 நிமிடங்களில் மூன்று தடவைகள் கண்மூடித்தனமான வான் தாக்குதலை சிறீலங்கா வான் படையினர் மேற்கொண்டுள்ளனர்.
இன்று (திங்கட்கிழமை) தாயக நேரம் பிற்பகல் 1:50 முதல் 2:10 வரையான 20 நிமிடங்களுக்குள் நிகழ்த்தப்பட்ட வான் தாக்குதல்களால், மக்களிற்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கள் பற்றிய விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
சிறீலங்கா படையினர் பாதுகாப்பு வலயம் நோக்கி தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டுவரும் நிலையில், கடலில் இருந்து பீரங்கித் தாக்குதலையும், வான்வழித் தாக்குதலையும் நடத்துவதால், மக்களின் உயிரிழப்புக்கள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன.
பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவொன்று போர் நிறுத்தத்திற்கான அழுத்தத்தினை சிறீலங்கா அரசுக்குக் கொடுப்பதற்காக இன்று கொழும்பு சென்றுள்ள நிலையில், சிறீலங்கா அரசின் அரக்கத்தனமான தாக்குதல்கள் அப்பாவிப் பொதுமக்கள் மீது தொடர்ந்து வருகின்றன

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.